தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். இதன்படி மறு அறிவிப்பு வரும் வரை இனிமேல் எந்த படங்களின் பிரஸ்மீட், பிரஸ் காட்சிகள் மற்றும் சினிமா விழாக்கள் என்பது இல்லை என்பதுதான் அந்த அறிவிப்பு

இதையும் படிங்க பாஸ்-  டிடிவி தினகரன் அணியில் சேர்வாரா விஷால்?

இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், இன்று திட்டமிட்டுள்ள அனைத்து சினிமா விழாக்களும் ரத்து செய்யப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.