காமெடி நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். சினிமாவில் பல படங்களில் நடித்த தாடி பாலாஜி, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமானார். அவரது மனைவியும் தாடி பாலாஜியுடன் இணைந்து பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில், தாடி பாலாஜி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது மனைவி குறித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தன்னுடைய மனைவி நித்யாவிற்கும், பைசல் என்பவருக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறும்போது, நித்யா-பைசல் கள்ளத்தொடர்புதான் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் என்றும், தமிழ்நாடு குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரியும் மனோஜ் என்பவர் பைசலுடன் சேர்ந்து நித்யா விவகாரத்தில் இனி நான் தலையிடக்கூடாது என்று தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.