சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரிவியூ திரையரங்கில் சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். படத்தை பார்த்த அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழை அளித்துள்ளனர்

மேலும் இந்த படத்தை பார்த்து முடித்த பின்னர் சென்சார் அதிகாரிகள் படகுழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் பணி முடிந்துவிட்டதால் இந்த படம் வரும் 12ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில மணி நேரத்தில் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.