சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் பிரமிக்கத்தக்கதாக உள்ளது

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்றே நாட்களில் இந்த படம் சுமார் ரூ.50 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் ரூ.19.1 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.5.3 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.9 கோடியும், கேரளாவில் ரூ.4.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.1.5 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடியும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெளியான மூன்றே நாட்களில் இந்த படத்தின் வசூல் மொத்த பட்ஜெட்டையும் நெருங்கிவிட்டதால் இந்த படம் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.