விரைவில் வெளியாக உள்ள தடம்

thadam movie

குற்றம் 23 வெற்றிப் படத்தை அடுத்து அருண் விஜய் நடித்து வெளிவரும் படம் தடம். இப்படத்தை குற்றம் 23 படத்தை தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பள் இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜயுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.