கடந்தாண்டை போல இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி களை கட்ட போகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் டல்லடித்தாலும் பின் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும், காரசாரமாகவும் சென்றது. பல சர்ச்சைகளை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகா்களின் மனதில் இடம்பிடித்தது.

பிக்பாஸ் சீசன் 2 வரும் ஜூன் 7ம் தேதி ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த சீசன் 2வும் நல்ல வரவேற்பு பெறுவதோடு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க உள்ளது. என்ன காரணம் என்றால் இந்த வீட்டிற்குள் செல்லும் இரு போட்டியாளர்கள் தான். யெஸ் எதிரும் புதிருமான இருந்த பாலாஜியும் அவரது மனைவியும் அந்த இரு போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.

விஜய் டிவியில் இருந்தாலே அந்த டிவியின் செல்லப்பிள்ளையாக அனைவரும் மாறிவிடுவார்கள். அப்படி தான் தாடி பாலாஜியும் இருந்து வருகிறார். அவர் கலக்கப்போவது யாரு நடுவர்களில் ஒருவராக இருந்து வந்தார். பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் தனது பங்கை அளித்தவா். தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். நடன நிகழ்ச்சியில் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டனர். ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் பாலாஜிக்கும் அவரது மனைவிக்குமிடையே மனஸ்தாபம் இருப்பது தெரிய வந்தது. நித்யா தனது கணவர் பாலாஜி மீது காவல் துறையில் புகார் அளித்தார். விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தையில் வழக்கு இருப்பதாகவும் ஏற்கனவே நாம் அறிந்த செய்தி தான். தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது மகள் போஷிகாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் நடிகர் சிம்பு தாடி பாலாஜி மனைவி நித்யாவிடம் பேசிய நிலையில் அந்த முயற்சி கைகூடவில்லை.

பிக்பாஸ் சீசன் 2வில் தாடி பாலாஜி கலந்து கொள்ளவிருக்கிறார். அதுபோல அவரது மனைவியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்ட போது முதலில் மறுத்து வந்ததாகவும், பின் தொடர்ந்து நிர்வாகம் பேசி சமரசம் செய்து கலந்து கொள்ள வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனவே பிரிந்திருந்த கணவன் மனைவி இருவரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேர்ந்து வாழ்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நூறு நாட்கள் ஒரே வீட்டில் வசிக்க போகும் தம்பதிகள் இந்த நிகழ்ச்சி மூலம் ஒன்றாக இணைந்து விடுவார்கள் என ரசிகா்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.