பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 100 வது நாள் நெருங்கிவிட்டது. இதில் டைட்டிலை எடுத்து செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. இதற்கான விடை வரும் வாரத்தில் தெரிந்துவிடும்.

இந்த வாரம் 2 எவிக்‌ஷன்கள் என போன வாரமே கமல்ஹாசன் அறிவித்து விட்டார். இந்நிலையில் தற்போது பாலாஜி வெளியேறியது உறுதியாகிவிட்டது.

இன்னும் கடைசி வரை இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்து. ஆரம்பம் முதலே பாலாஜிக்கு நல்ல ஆதரவு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பல வாரங்கள் அவரும் காப்பாற்றப்பட்டார். அவருடம் அவரின் மனைவி நித்யாவும் இந்த போட்டியில் கலந்து கொண்டார்.