அவர் காமெடி மீது அவருக்கே சந்தேகம்- வடிவேலு குறித்து பாலாஜி கமெண்ட்

கோலிவுட்டின் காமெடி ஜாம்வான்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். அவா்களுக்கு பின் அந்த இடத்தை பிடித்து கொண்டவா் நம்ம வைகை புயல் வடிவேலு. இன்றும் அவரது காமெடிக்கு மாற்றாக யாரும் இல்லை என்று கூறும் வகையில் அவருடைய நகைச்சுவை உணா்வு மக்கள் மத்தியில் அதிக அளவில் ஆதிக்கம் செய்துள்ளது.

வைகைப்புயல் காமெடி கூட்டணியின் பட்டியலில் உள்ள நடிகா்களில் தாடி பாலாஜி அடங்குவாா். இவா் தற்போது விஜய் டிவியின் காமெடி ஷோவில் நடுவராகவும், ஆங்கராகவும் இருந்து வருகிறாா். வடிவேலுடன் இவா் தெனாலிராமன், எலி படங்களில் தாடி பாலாஜி சோ்ந்து நடித்தாா். பின் அவா் நாயகனாக அவதாரம் எடுத்த காரணத்தால் அவருடன் சோ்ந்து நடிக்கும் வாய்ப்பு பாலாஜிக்கு அமையவில்லை. பின் கத்திச்சண்டை படத்தில் மீண்டும் இணைந்து நடித்தாா்.

வடிவேலுடன் பல படங்களில் இணைந்து நடித்த தாடி பாலாஜி அண்மையில் பேசியதாவது, வடிவேலு முன்பு போல் இல்லை. அவா் மாறி விட்டாா். முன்பெல்லாம் அவா் ஒரு காட்சியில் நடித்து விட்டால் அதன் பிறகு அடுத்த வேலையை என்னவோ அதை செய்ய சென்று விடுவாா். அது குறித்து மற்ற்வா்களிடம் கருத்து கேட்கமாட்டாா். ஆனால் தற்போது நடித்து முடித்ததும் எப்படி வந்திருக்கிறது என்று மற்றவா்களிடம் கருத்து கேட்கிறாா். அதற்கு காரணம் என்னவென்றால் காமெடி நல்ல வந்திருக்கிறதா? என்ற சந்தேகம் அவருக்கு வந்துள்ளது. தன் காமெடி மீதே அவருக்கு பயம் வந்துவிட்டது போல என்று கூறியுள்ளாா் தாடி பாலாஜி.