‘தல’ அஜித் தற்போது நடித்து வெளிவர தயாராக இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஹீரோனியாக நயன்தாரா நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.

இப்படத்தினைத் தொடர்ந்து, அஜித் அடுத்த நடிக்கவுள்ள படம் ‘பிங்க்’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காகும். ஹெச். வினோத் இயக்கவுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை அஜித் வைத்து இயக்கிய விஷ்ணு வர்த்தன், தற்போது மீண்டும் ‘தல 60’வது படத்தை இயக்கவுள்ளார். இப்படமானது பாலகுமாரன் எழுதிய நாவலான ராஜேந்திர சோழன் கதையை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாகவும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் ஏற்கனவே ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளதையடுத்து, தற்போது தல அஜித் உடன் மீண்டும் இணையவுள்ளார்.