‘தலை விடுதலை’ பாடலின் எழுச்சிமிகு வரிகள்

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் ஒரு பிரளத்தையே ஏற்படுத்திய நிலையில் நேற்று இந்த படத்தின் சிங்கிள் பாடலின் ஆடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா எழுதிய இந்த பாடலின் எழுச்சிமிகு வரிகள் இதோ:

தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறுவோம்
கால்களில் கீழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும்போது
தோள்களில் கீழே நீ ஏறு ஏறு

உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

நெவர் எவெர் கிவ் அப்

வேகம் என்னும் தீயிலே எண்ணெய் ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்த நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடிப்பகை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா