தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த சில மணி நேரங்களாக அஜித் குறித்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது

அந்த புகைப்படத்தில் அஜித் துப்பாக்கி சுட பயிற்சி எடுப்பது போன்று உள்ளது. சென்னை ரைஃபில் கிளப்பில் நடந்த இந்த பயிற்சி அஜித், நடிக்கும் விசுவாசம் படத்திற்கான பயிற்சி என்று கூறப்படுகிறது

அஜித் தான் நடிக்கும் எந்த காட்சியிலும் டூப் வைத்து கொள்ள விரும்பாதவர் என்பதால், முறைப்படி துப்பாக்கி சுட பழகிக்கொண்டு அந்த காட்சியில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.