‘சிறுத்தை’ சிவா மற்றும் ‘தல’ அஜித் கூட்டணியில் உருவாகி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்ற ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தினைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்து மாஸாக உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படம் அடுத்த ஆண்டு (2019) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று (நவ.25) இரவு 9மணிக்கு படக்குழு வெளியிட்டது, அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது. இந்த போஸ்டர் வெளியான பின்பு சத்தமில்லாமல் இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவியது. யூடியூப்பில் வெளியான 12 மணிநேரத்தில் 20இலட்சம் பார்வையாளர்கள் இதனை பாரத்துள்ளனர். இதன் மூலம் இது புதிய சாதனை படைத்துள்ளது.

‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டரானது 2.5இலட்சத்திற்கும் மேல் லைக்ஸ் பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை இருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனையை இப்படம் படைத்துள்ளது. இந்த விடியோவானது மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சினிமாவில் மிகவும் பிடித்தது என பதியப்பட்ட முதல் 4 முக்கிய இடங்களை பிடித்த படத்தின் மோஷன் போஸ்டர்கள் இதோ,

1. விஸ்வாசம் – 280K+

2. பேட்ட – 143k

3. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் – 123k

4. சாமி ஸ்கெயர் – 101k