திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்திக்க தினமும் யாராவது விஐபிக்கள் வந்து செல்கின்றனர். நேற்று அடுத்தடுத்து அஜீத்தும், விஜய்யும் வந்து தளபதியும் செயல்தலைவருமான ஸ்டாலினிடம் நலம் விசாரித்து சென்றனர்.

அஜீத் கடந்த திமுக ஆட்சியில் கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு சினிமாவினர் அழைப்பதை மேடையிலேயே தைரியமாக கருணாநிதியிடம் சொல்லி பாராட்டு வாங்கியவர். அது போல் விஜய் சிறுவயதில் நடித்த அவரது தந்தை இயக்கிய படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.