2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்க இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புத்தாண்டு தினத்தில் ‘தளபதி 62’ படத்தின் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி, புத்தாண்டுக்கு முன்பே ‘தளபதி 62’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்,தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விபரங்களும் வெளிவரவுள்ளதாம்

புத்தாண்டுக்கு முன்பு என்றால் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 11.59க்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த புத்தாண்டு தளபதியின் டிரெண்டோடு பிறக்கும் என்பது மட்டும் தற்போதைக்கு உறுதியாகியுள்ளது.