விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படத்தின் கதை இணையதளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய், கொல்கத்தாவை சேர்ந்த கேங்க்ஸ்டர் கேரக்டரிலும், நாகர்கோவிலை சேர்ந்த மீனவர் கேரக்டரிலும் என இரண்டு கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது

இதற்கு முன்னர் விஜய்-முருகதாஸ் இணைந்த ‘கத்தி’ படத்திலும் விஜய்க்கு இரண்டு வேடங்கள் என்பதும், அந்த படத்தின் படப்பிடிப்பும் கொல்கத்தாவில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.