Thalapathy Vijay 63 Shooting Spot : ‘தெறி, மெர்சல்’ படங்களுக்கு பிறகு மீண்டும் ‘தளபதி’ விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய்யின் கேரியரில் 63-வது படமாம்.

இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை இந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.