கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராம பகுதிகளில் நேரடியாக சென்று பொது மக்களிடம் கோரிகை மனுக்களை மக்களவை துணை சபாநாயகர் பெற்று வருகிறார். இன்று அரவக்குறிச்சி தொகுதி, க.பரமத்தி யூனியனுக்குட்பட்ட சீரங்க கவுண்டனுர் பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியபோது,

கடந்த ஐூன்மாதம் மக்களிடம் நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறேன். சுமார் 40ஆயிரம் கிராமங்கள் உள்ளது. என்றும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைசெய்யப்படும். சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கள் தேவையில்லை என்று கூறியுள்ளார் என்ற கேட்ட கேள்விக்கு அமைச்சர் எதன் அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்று தெரியவில்லை, தி.மு.க., ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்டவைகளை அமைக்கும் போது ஸ்டாலின் பொது மக்களின் கருத்துக்களை கேட்டுதான் திட்டத்தை துவக்கினார்களா என்று விளக்க வேண்டும்.

நக்கீரன் கோபல் மீது போடப்பட்ட 124 வழக்கு தொடர்பாக கேட்ட போது, இது கவர்னர் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு போடப்பட்டுள்ளது. அது தொடர்பாக நான் கருத்து சொல்லகூடாது. அனைவருக்கும் பேச்சு, எழுத்து சுதந்திரம் தேவைதான் அதனை நாம் தவறாக பயன்படுத்தி கொள்ள கூடாது. ராபேல் ஊழல் குறித்து கேட்ட போது, பிரான்ஸ் நாட்டில் உள்ள நிறுவனத்திற்கும் இந்தியாவில் உள்ள நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு ஏற்பட்டது. அதில் மத்திய அரசு தலையிடாது என்று ராணுவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு சென்றுள்ளது. நாம் யார்மீதும குற்றம் சாட்டுவதோ, குறைகூறுவதோ முடியாது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராகுல்காந்திதான், பிரதமர் வேட்பாளர் என்றும் அவரைதான் பிரதமராக ஆக்குவோம் என்று தி.மு.க., கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியது கிடையாது, அவர் பேசவும் மாட்டார், தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியுடன் மறைமுகமாக தொடர்பு வைத்துள்ளார்கள்.

சி.ஆனந்தகுமார்