நடிகர் தம்பி ராமையாவை பற்றி தெரியாதவர் இருக்க முடியாது இயக்கத்திலும் சரி நடிப்பிலும் சரி தனக்கென ஒரு தனித்துவத்தை உடையவர்.

இவர் சமீபத்தில் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வீசும் ஸ்ரீரெட்டியை கடிந்து ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி ஒரு பெண் நிர்வாணமாக அவர் உட்கார்ந்து அவர் போராட்டம் நடத்தி இருப்பதை அவர்கள் பெற்றோர் பார்த்து மிகவும் வேதனை அடைந்திருப்பார்கள்

அதில் இருந்து உன்னை தவிர்த்து கொண்டிருக்க முடியாதா? சினிமா இல்லை என்றால் வேறு ஏதாவது வேலை பார்த்திருக்கலாமே இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிறாய் நாகரீகமான வேலைகள் எதற்காவது சென்றிருக்கலாமே, ஏன் இவ்வளவு பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த பெண்ணை நம்ப வைத்து நம்பிக்கை கொடுத்து அந்த பெண்ணை ஏமாற்றி இருந்தாலும் கேவலம்தான். அப்படி ஏமாற்றி இருந்தால் பெண் பாவம் சும்மா விடாது.

ஸ்ரீரெட்டி தொடர்ந்து சொல்லும் குற்றச்சாட்டுக்களை வைத்து பார்த்தாலும் நம்பும்படியான ஆதாரங்களை அவர் தராமல் பாசிட்டிவ் கோணத்தில் அணுகாமலே சென்று கொண்டிருக்கிறார். அந்த பெண்ணை பார்த்தால் பாவப்பட மட்டுமே தோன்றுகிறது என கூறியுள்ளார்.