தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நாங்கள் அதிமுகவில் சேர தயார் எனவும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழம் வெற்றிபெற்றால் நீங்கள் எங்கள் பக்கம் வந்துவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார் தினகரன் ஆதரவு தங்க தமிழ்ச்செல்வன்.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். இதனையடுத்து அனைத்து கட்சியினரும் நாங்கள் தான் வெற்றிபெறுவோம் என கூறி வருகின்றனர். இதில் அதிமுகவினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  தீவிர சிகிச்சை பிரிவில் தம்பிதுரை - உண்மை நிலவரம் என்ன?

இந்நிலையில் தினகரன் தரப்பை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் செய்தியாளர்களை புதுக்கோட்டையில் சந்தித்தார். அப்போது, திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்திற்கு இடைத் தேர்தல் வரவுள்ளது. தைரியமிருந்தால் நடத்துங்கள். எவ்வளவு வேகமாக நடத்த முடியுமோ அவ்வளவு வேகமாக நடத்துங்கள் என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  வச்ச பேனர எல்லாம் எடுங்க - கலக்கத்தில் தேனியின் தோனி !

மேலும் அந்த இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றிபெற்றால் எங்கள் பின்னால் வந்துவிடுங்கள், அதிமுக வெற்றிபெற்றால் நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் வந்துவிடுகிறோம். சவாலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் இருந்தால், பன்னீர்செல்வம், பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோர் பேட்டி கொடுக்கட்டும். நாங்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறோம் என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.