ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்த தன்ஷிகா!!!

மாவீரன் திலீபன் என்ற படத்தை இயக்கியவர் ஆனந்தமூர்த்தி. இப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்ற இந்தப்படம் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. தற்போது சினம் என்னும் ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார், இந்த படத்தில் தன்ஷிகா நடித்துள்ளார்.

இப்படம் மும்பையில் வசிக்கும் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை. இந்த படத்தில், ஒரு பாலியல் தொழிலாளி ஆவணப்பட இயக்குனரிடம் தன் கதையை படமாக எடுக்குமாறு கூருகிறாள். அதை படமாக எடுக்கிறார் இயக்குனர். இதுதான் படத்தின் கதை. இதில் இயக்குனராக நடிகை பட்டியா பக் நடித்துள்ளார். தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிக்க தன்ஷிகா ஒரு பைசா கூட சம்பளம் பெற்றுக்கொள்ளவில்லை. அதேபோல முடிந்ததை கொடுக்க முன்வந்த போதும் மறுத்து விட்டார்.மேலும் இப்படத்தை சினிமாவாக எடுத்திருக்கலாம் அனால் தணிக்கை குழுவை தாண்டி படம் வெளிவராது. அதனால் தான் ஆவணபடமாக எடுத்துள்ளோம் என கூறுகிறார் ஆனந்த மூர்த்தி.