அஜித்துடன் மோதும் அண்டாவும் ஆண்ட்ரியாவும்!

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘விவேகம்’ படத்தின் முழு படப்பிடிப்பும் இந்த வாரத்தில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘விவேகம்’ படத்தை வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே அஜித்துடன் மோதுவதை தவிர்க்க முன்னணி நடிகர்களே தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ள நிலையில் இரண்டு பிரபல நடிகைகளின் படங்கள் அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றன.

ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘அண்டாவ காணோம்’ மற்றும் ஆண்ட்ரியா நடித்த ‘தரமணி ஆகிய படங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் என்ற சுனாமியில் இருந்து அண்டாவும், ஆண்ட்ரியாவும் தப்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்