மாநில அரசு இருந்தால்தானே விமர்சிக்க முடியும்: நக்கல் பதிலளித்த ராம்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியல்வாதிகள் மீதான பயம் கோலிவுட் திரையுலகினர்களுக்கு கொஞ்சம் கூட இல்லாமல் போய்விட்டது. ஒருபக்கம் கமல்ஹாசன் டுவிட்டரில் அரசியல் செய்து கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் கரு.பழனியப்பன் போன்ற இயக்குனர் அமைச்சர்களை நேரடியாக தாக்கி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘தரமணி’ படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ‘உங்கள் படத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே விமர்சிக்கப்படுகிறதே, மாநில அரசின் திட்டங்கள் என்ன ஆச்சு? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ராம், ‘மாநில அரசு என்ற ஒன்று இருந்தால்தானே விமர்சிக்க முடியும். மத்திய அரசின் கைப்பாவையாக அவர்கள் இடும் கட்டளையை நிறைவேற்றி வரும் மாநில அரசை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது இதுபோன்று ஒரு இயக்குனர் விமர்சனம் செய்தால் அவரது கதி அதோ கதிதான். ஆனால் இந்த விமர்சனத்திற்கு எந்தவித பதிலடியும் தராமல் அமைதியாக அமைச்சர்கள் இருப்பதில் இருந்து ராம் சொல்வது உண்மைதானோ என்று எண்ண வைப்பதாக கோலிவுட் திரையுலகினர் கிசுகிசுத்து வருகின்றனர்.,