ஆண் சரக்கடித்தால் ‘யூ’, பெண் சரக்கடித்தால் ‘ஏ’

12:07 மணி

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ‘தங்க மீன்கள்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. அதன் பின்னர் 4 வருடங்கள் கழித்து அவர் இயக்கிய அடுத்த படமான ‘தரமணி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஆண்ட்ரியா, வசந்த், அழகம்பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஒரு பெண் ராவ் ஆக சரக்கு அடிப்பது போன்ற காட்சி உள்ளதால் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

நடிகர்கள் சரக்கு அடிக்கும் காட்சிகள் உள்ள பல திரைப்படங்களுக்கு ‘யூ’ மற்றும் ‘யூஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகைகள் சரக்கு அடித்தால் மட்டும் ‘ஏ’ சான்றிதழா? என்று இயக்குனர் ராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393