இன்று தனுஷ் நடித்த விஐபி2,தரமணி,உதயநிதி நடிப்பில் பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இதில் விஐபி2 படத்திற்கு மிகவும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிசல்ட்?  விஐபியுடன் ஒப்பிடுகையில் விஐபி 2 சுமார் ரகம் என பலர் கூறுகின்றனர். ரகுவரன் ரிட்டன் ஆகாமல் இருந்திருந்தாலே பெட்டர் என்றும் கலாய்த்துள்ளனர். இன்று வெளியான படங்களில் யாரும் எதிர்பார்க்காத தரமணி பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

ஒரு நல்ல படத்தை பார்க்க வேண்டும் என்றால் தரமணியை பாருங்கள் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.