கமல்ஹாசனிடம் மாட்டிக்கொண்டவர்கள் இந்த 14 பேர் இவர்கள் தான்

உலக நாயகன் கமல்ஹாசன் முதன்முதலாக தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெரும் 14 பேர்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த 14 பேர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமலாபால், சடகோபன் ரமேஷ், ராய் லட்சுமி, ராதாரவி, சஞ்சனா ஷெட்டி, அமித் ராகவ், சிம்ரன், உமாரியாஸ்கான், தாடி பாலாஜி, சஞ்சிதா ஷெட்டி, எச்.ராஜா, ஹேமங் பதானி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகிய 14 பேர்கள் தான் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்கள்

100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல், கேமிராக்களின் கண்களில் இருந்து தப்பிக்க முடியாமல் இந்த 14 பேர்களும் இருக்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி இந்தியில் பிரபலமானது போல் தமிழிலும் பிரபலமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்