முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்திக்கு பதிலாக பிரதமர் பதவியை ஏன் மன்மோகன் சிங் ஏற்றார், மற்றும் அவரது ஆட்சிக் காலம் குறித்தும் ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  அமேதியில் ராகுல் பின்னடைவு – அதிர்ச்சியில் காங்கிரஸ்

மன்மோகன்சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு, பிரதமர் அலுவலகத்தில் சோனியாவின் தலையீடு இருந்ததாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் அன்றைக்க பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவரானார் சோனியா காந்தி - புறக்கணிப்பில் தென் இந்தியா ?