சுசித்ராவின் பின்னால் அந்த மூன்றெழுத்து நடிகர்?

07:24 காலை

நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களில் வெளியிடும் பாடகி சுசித்ராவின் பின்னால் ஒரு மூன்றெழுத்து நடிகர் உள்ளார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் கசிந்துள்ளது.

கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என நடிகர் தனுஷ், திரிஷா, விஜய் தொலைக்காட்சி புகழ் டி.டி ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிருத், ஆண்டிரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பின், நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, நண்பன் படத்தில் நடித்த அனாயா போன்றோரின் அரை நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட பலர் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார்.

இந்நிலையில், விரைவில் தனுஷ் மற்றும் அமலாபால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்படும்.மேலும், இன்னும் பல நடிகைகளின் லீலைகளை வெளிப்படுத்துவேன் என அந்த டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு நேரங்களில் பார்ட்டிக்கும் செல்லும் 25க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளுக்கென வாட்ஸ் அப்பில் ஒரு குழு ஏற்படுத்திருப்பதாகவும், அதுக்கு மூன்றெழுத்து ஒல்லி நடிகர்தான் அட்மினாக செயல்படுவதாகம் கிகிசுக்கப்படுகிறது. மேலும், வாரத்தின் இறுதி நாட்களில் அவர்கள் கும்மாளம் போடும் போது, எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த குரூப்பில் இருக்கும் 25 பேர்களுக்கும் பகிரப்படுகின்றனவாம்.

இப்படி அந்த புகைப்படங்கள் அடங்கியுள்ள மூன்றெழுத்து நடிகரின் செல்போன் தற்போது சுசித்ரா வசம் இருப்பதாகவும், அதிலிருந்துதான் புகைப்படங்களும், வீடியோக்களும் சுசித்ரா டிவிட்டர் பக்கத்தில் பகிரப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது. இதில் முக்கியமாக, அந்த மூன்றெழுத்து நடிகரை பிடிக்காத மற்றொரு வாரிசு நடிகர் (அவரும் மூன்றெழுத்து நடிகர்தான்) சுசித்ராவை பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறது.

மூன்றெழுத்து ஒல்லி பிச்சான் நடிகரின் இமேஜை டேமேஜ் செய்யாமல் விடமாட்டேன் என அவர் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறாராம். இன்னும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரும் எனத் தெரிகிறது.

ஆனால், தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, இது போன்ற படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என சுசித்ரா கூறியுள்ளார்.

(Visited 86 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com