நடிகர் பிரபாஸ் கன்னத்தில் ரசிகை ஒருவர் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகியுள்ளனர். தற்போது அவர் சாஹோ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பாக அவர் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட நடிகை அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுத்த பின் அவரை கன்னத்தை அறைவது போல் லேசாக ஆசையாக தட்டிச் சென்றார். ஆனாலும், பிரபாஸ் கோபப்படாமல் புன்னகைத்தவாறு கன்னத்தை தடவியவாறு அங்கிருந்து சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.