‘மெர்சல்’ படத்தில் சிறுவயது விஜய் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவன் அக்‌ஷத். முதல் வகுப்பு படிக்கிறான். ‘மெர்சல்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அக்‌ஷத் இடம் கேட்டபோது….

      “நான் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் அப்பாவோட நண்பர் அதை பார்த்துவிட்டு ‘மெர்சல்’ படத்துக்கு குழந்தை நட்சத்திரம் தேர்வு நடப்பதை தெரிவித்தார். அதில் நானும் கலந்து கொண்டு நடித்துக்காட்டினேன். எனது நடிப்பை பார்த்து உடனே தேர்வு செய்தார்கள்.நான் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், சினிமாவில் நடித்தது புதுமையாக இருந்தது.

இந்த படத்தில் சின்ன சின்ன வசனங்கள் தான் பேசி இருக்கிறேன். விஜய் அங்கிளை ‘அய்யா’ என்று கூப்பிடுவது, ‘ஐசு… அதெல்லாம் செட் ஆகாது ஐசு…’, ‘தம்பி எப்பப்பா வருவான், இதுபோன்ற வசனங்கள் தான் பேசினேன்.

‘எனக்கு ஐசை பார்க்கணும்’ என்று சொல்லிக்கொண்டு நான் ஓடும் காட்சி ஒரே டேக்கில் படமானது. விஜய் அங்கிள் எனக்கு கார், ஒரு பெரிய நாய்குட்டி பொம்மை, கால்பந்து என பல பரிசுகள் கொடுத்தார். அட்லி அங்கிளும் பரிசு கொடுத்தார். நானும் விஜய் அங்கிள் மாதிரி பெரிய ஹீரோ ஆவேன்” என்றார் குதூகலமாக.