மறக்க முடியுமா?- தமிழ் சினிமாவை கலக்கிய பசி நாராயணன்

09:17 காலை

பிரபல இயக்குனர் துரை இயக்கிய பசி படம் மூலம் அறிமுகமானவர் நாராயணன். பசி படம் முதல் படமானதால் பசி நாராயணன் என்ற பெயர் பெற்றார். தமிழ் சினிமாவில் கவுண்டமணி,செந்தில்,ஜனகராஜ்,சார்லி,வடிவேல் போன்ற அனைத்து நடிகர்களுடன் சேர்ந்து காமெடி செய்துள்ளார் கவுண்டமணியுடன் இணைந்து காமெடி செய்த சூரியன் படத்தின் காமெடியான ஃபோன் வயர் பிஞ்சி மூணு நாளாச்சி என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு பேஜ் கூட உள்ளது .அந்த அளவு புகழ்பெற்ற டயலாக் அது.

Loading...

கவுண்டமணி நடித்த பாட்டுக்கு நான் அடிமை படத்தில் கவுண்டமணியின் மளிகை கடையில் வேலை செய்யும் நபராக வருவார். அதில் ஒரு தேங்காய் உடைக்கும் காட்சியில் கவுண்டர் தேங்காய் உடைத்துவிட்டு அவரே எடுத்துக்கொள்வார் அதற்கு காரணம் பசி நாராயணன் கேட்பார். கவுண்டர் உடனே இதென்ன கண்ட கிபி 1310ல் எங்க குடும்பத்துல ஒரு கல்யாணம் நடந்தது அதுல ஒரு தேங்காய உடைச்சு ஊருக்கே சட்னி அரைச்சிருக்கோம் என்பார் உடனே நக்கலாக வெளங்கும் அப்டீனு சொல்வார். எதைடா சொல்றனு கவுண்டர் கேட்பார். உங்க குடும்பம் அப்டீனு நக்கலாக பதில் சொல்வார். கவுண்டர் உடனே அப்டி சொல்றா பல்லா என நக்கல் விடுவார்.

பாண்டியராஜன் நடித்த மனைவி ரெடி.ஆண்பாவம் படங்களில் நல்ல காமெடி செய்து இருப்பார். இவர் நடித்த கடைசி திரைப்படம் 1998ல் வெளிவந்த நினைத்தேன் வந்தாய் அதோடு இவர் மரணம் அடைந்தார்.  கடைசி படமான நினைத்தேன் வந்தாய் படத்தில் காபி சாப்டிங்களான்னா? டிபன் சாப்டிங்களான்னா என கடைசி கல்யாண காட்சியில் சார்லி விஜயுடன் சேர்ந்து காமெடி செய்வார். இவரின் நல்ல காமெடிக்கு உதாரணம் கன்னி ராசி படத்தில் இடம்பெற்ற ஒரு டயலாக் இது .

கன்னி ராசி என்று பாண்டியராஜன் இயக்கி பிரபு, ஜனகராஜ் ரேவதி நடித்த படம் ஒன்று வந்தது. அதில் ஒரு காமெடி சீன்: ரேவதிக்கு செவ்வாய் தோஷம் என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் ஜனகராஜ் அவர் மேல் உள்ள காதலால் தன் பெயரில் ஒரு போலி செவ்வாய் தோஷம் ஜாதகம் எழுதிக் கொடுக்க ஜோசியரைத் தேடுவார். அப்போது பசி நாராயணன் என்ற காமெடி நடிகர் ஜோசியராக ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருப்பார். ஜனகராஜ் அவரிடம் ஜாதகம் எழுதிக் கொடுக்கக் கூறும் முன் அவரது திறமையை பரிசோதிப்பார்: ஜனகராஜ்: ஆமாம்! எவ்வளவு வாங்குறீங்க. பசி நாராயணன்: 100. உடனே ஜனகராஜ் 100ஆ? என்பார் உடனே பசி நாராயணன் என் திறமைக்கு ஊர் வாங்கச்சொல்றது 100, ஆனா நான் வாங்குவேனா ஒரு 50 என்பார். ஜனகராஜ் உடனே 50ஆ? என்பார். அது மக்கள் எனக்கு கொடுக்க விருப்பப்படறது ஆனா நான் தொட மாட்டேனே ஒரு 25 என்று கடைசியில் 5 ரூபாய் கொடுங்க என்று கெஞ்சும் நிலைமைக்கு இறங்கி வருவார். அந்தக் காலக்கட்டத்தில் மிகவும் பிரசித்தமான காமெடி இது.பசி நாராயணன் நம்மை விட்டுச் சென்றாலும் அவரது நகைச்சுவையை காணும்போது அவரது நினைவுகள் என்றும் நம்மை விட்டு போகாது என்பதே உண்மை

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com