ஜெய்-அஞ்சலி நடித்த ‘பலூன்’ என்ற பேய்ப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த படத்தில் ஜெய் நடிக்கவில்லை என்பதும் இந்த படத்தில் அஞ்சலியே பேயாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ‘லிசா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் டுவிட்டரில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ராஜூ வி’ஸ்வநாத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.