கமல், ரஜினி இருவருமே அரசியல் களத்தில் குதிக்க முடிவு செய்துவிட்டாலும் தேர்தல் வரும் வரை இருவருமே அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இன்னும் மூன்றரை ஆண்டுகள் தமிழக அரசின் ஆட்சிகாலம் இருப்பதால், இப்போதே அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரஜினி கருதுவதாக தெரிகிறது. ஒருவேளை உள்ளாட்சி , பாராளுமன்ற தேர்தல் வந்தால் அதற்கு தயாராக வேண்டும் என்ற எண்ணமும் இருவரிடம் உள்ளது.

ஆனாலும் இருவருக்குமே சட்டமன்ற தேர்தல்தான் குறி. எனவே தான் ரஜினி தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கமலும் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் ‘இந்தியன் 2′ மற்றும் பிக்பாஸ் 2’ ஆகியவற்றில் இப்போதைக்கு கவனம் செலுத்தவுள்ளாராம். முதலில் தொழில், வருமானம், அதற்கு பின்னர்தான் மக்கள் சேவை என்பது தான் இருவரின் எண்ணமாக இருக்குமோ?