சாருஹாசன் தனது ஃபேஸ்புக்கில் அவ்வப்போது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை கூறி வருவது வழக்கமே. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியல் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு இருதரப்பு ரசிகர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன

இந்த நிலையில் சாருஹாசன் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது ஃ[பேஸ்புக்கில் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர்தான் என ரஜினிதான் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தான் என்றும், இந்த கருத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு உங்களை நான் புரிந்து கொள்வேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று சாருஹாசன் கூறியுள்ளார்.

சாருஹாசனின் இந்த கருத்தால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், கமல் சகோதரர் என்பதால் எந்தவித விமர்சனங்களையும் வெளிப்படுத்தாமல் உள்ளனர்,.

The next CM will be from Karnaataka Those who do not agree … just call me a fool. I can understand you this year… you can understand me next year.

Publiée par S. Charu Hasan sur vendredi 27 avril 2018