தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில் தற்போது ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ முதலான படங்களில் நடித்திருப்பவரும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான ஹரிஷ் கல்யாண் அடுத்து ‘கிரகணம்’ படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  வெறித்தனமான அம்மன் தாயி பட டீசர் - குதூகலத்தில் ஜூலி வெறியர்கள்

      இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், ‘வேலையில்லா பட்டதாரி–2’ படத்தில் நடித்தவருமான ரைசா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் மற்ற விவரங்கள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.