திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது எனக் கூறிவரும் அன்புமணி நடிகர் சந்தானத்துக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது எனவும் அப்படி நடித்தால் அதனை எதிர்த்து முதலில் குரல் கொடுக்கும் நபராக அன்புமணி இருந்து வருகிறார். ரஜினியின் ‘பாபா’, அஜித்தின் அசல் மற்றும் விஜய்யின் சர்கார் ஆகியப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அவர்கள் புகைப்பிடிப்பது போன்று இருந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் அன்புமணி.

இதையும் படிங்க பாஸ்-  'தளபதி 63' படத்தின் சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தானம் நடித்த ‘டகால்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அவர் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்த போது அதற்கு அன்புமணியோ பாமக வினரினோ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது சர்ச்சைக்குள்ளானது. இதனை அடுத்து அன்புமணியும் சந்தானமும் ஒரே சமூகததை சேர்ந்தவர்கள் என்பதால்தான் அன்புமணி இதனைக் கண்டுகொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு கூட அன்புமணியின் இந்த மௌனத்தை சாடியுள்ளார்.