சமந்தாவின் சிலம்பாட்ட பயிற்சி ரகசியம் இதுதானா?

பிரபல நடிகை சமந்தா ஜிம் ஒன்றில் சிலம்பம் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு தேர்ச்சி பெற்ற சிலம்பாட்ட வீரர் போல சமந்தா கம்பு சுத்தியதை பார்த்து அனைவரும் அசந்துவிட்டனர். இந்த சிலம்பம் பயிற்சியில் சமந்தா கடந்த பத்து மாதங்களாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் சமந்தா எதற்காக சிலம்பம் பயின்றார் என்பதை பிரபல தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சமந்தா நாயகியாக நடிப்பதாகவும், அதில் அவருக்கு சிலம்புச்சண்டை காட்சிகள் இருப்பதால் டூப் இல்லாமல் நடிக்கும் வகையில் அவர் சிலம்பம் கற்றதாகவும், அதற்கு தாங்கள் நன்றி கூறி கொள்வதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 ஏஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா முதன்முதலில் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளது.