அஜித், விஜய் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இதுதான். சிறுத்தை சிவா

தல அஜித் நடிக்கும் ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்று பல இயக்குனர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்களே அஜித்தின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அஜித்தின் படத்தை அடுத்தடுத்து இயக்கும் அதிர்ஷ்டக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இயக்குனர் சிவா

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றுக்கு சிவா அளித்த பேட்டியில் அஜித், விஜய் ஆகிய இருவர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ‘அஜித், விஜய் ஆகிய இருவருமே தங்களது பலங்களை நன்கு அறிந்திருப்பவர்கள் என்றும் இருவருமே அதிகம் பேசமாட்டார்கள் என்றும் இதுவே அவர்கள் பெரிய நட்சத்திரங்களாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யை பலமுறை நேரில் சந்தித்துள்ளதாகவும், தங்களுக்குள் நல்ல நட்பு இருப்பதால் விரைவில் விஜய்யை இயக்குவேன் என்றும் கூறிய சிவா, விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் வெற்றி ரகசியமே கடின உழைப்பு தான், இந்த உழைப்பு ஒன்றுதான் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.