நேற்று திரைக்கு வந்த தமிழ்ப்படம் 2 பற்றி பார்க்கும் இடமெல்லாம் கேட்கும் இடமெல்லாம் பாஸிட்டிவ் விமர்சனங்களாக வந்து குவிகின்றன. திரையிட்ட இடமெல்லாம் ஏதோ ரஜினி,கமல், விஜய், அஜீத் படங்கள் ரிலீஸ் ஆவது போல் ரசிகர் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

காலையில் 5 மணிக்கெல்லாம் சில தியேட்டர்களில் முன்னணி நடிகர் பட ரேஞ்சுக்கு தமிழ்ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் ரிலீசாகிறது. விவசாயிகளை மையப்படுத்தி வெளிவரும் இந்த படம் மிக சிறப்பாகவே வந்துள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கிறது.

படத்தின் போஸ்டர்கள் விளம்பரங்கள் போன்றவையும் கிராமத்து பின்னணியில் கலர்புல்லாக வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது நேற்று தமிழ்ப்படத்திற்கு பிறகு கூடிய ரசிகர்கள் கூட்டம்போல இன்றும் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கார்த்திக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு.இயக்குனர் பாண்டிராஜ் படத்திற்க்கும் அதிகம் எதிர்பார்ப்பு உண்டு