ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் வினியோக உரிமையை தக்க வைக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கதறிக்கொண்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

சன் புரடெக்‌ஷன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள படம் பேட்ட. இப்படத்தின் தமிழக வினியோகஸ்த உரிமையை தேனாண்டாள் பிலிம்சிடம் சன் பிக்கர்ஸ் கொடுத்திருந்தது. ஆனால், சர்கார் விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பில் பேட்ட படத்தின் தமிழக வினியோக உரிமையை தயாரிப்பாளர் தாணு ரூ.150 கோடிக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்து விட்டதாக சமீபத்தில் செய்தி கசிந்தது.

இதையும் படிங்க பாஸ்-  'பேட்ட' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி!

பேனை பெருமாளாக்கும் வித்தை தெரிந்த தாணு மொக்கை படத்தையே விளம்பரத்திற்கு செலவழித்து ஓட வைத்து விடுவார். ரஜினி படம் என்றால் இன்னும் அவருக்கு சுலபம். இப்படித்தான் சுமாரான கபாலியை பெரிய வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க பாஸ்-  அது வேற வாயி.. இது நார வாயி.. பாஜக தோல்வி குறித்து ரஜினி பேட்டி

இந்நிலையில், இந்த முறை தவறு நடக்காது.. படத்தை கை மாற்ற வேண்டாம் என தேனாண்டாள் பிலிம்ஸ் சன் பிக்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

சன் பிக்சர்ஸ் என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை.