அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் மாபெறும் வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு தமிழக பாஜகவுக்கும் பெரும் பங்கு உண்டு. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறேஅது. பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் இதே கருத்தை கூறியுள்ளதால் சர்ச்சை அதிகரித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் பெர்சல் சர்ச்சைக்கு தயாரிப்பு நிறுவனம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் எங்களுக்கு கௌரவம். இந்த வாய்ப்பை அளித்த விஜய்,அட்லிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர். இதனால் மெர்சல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர்.