பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.35 கோடி செலவு…

தெலுங்கு முன்னணி நடிகராக விளங்கும் பிரபாஸ், தற்போது பாகுபலி படத்தின் 2ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

பாகுபலி படத்தின் 2 பாகங்களுக்காகவும், அவர் மொத்தமாக 4 வருடங்கள் செலவழித்துள்ளார். நடுவில் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில், பாகுபலி2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இதையடுத்து, ஒரு புதிய படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார். இந்த படம் ரூ.150 கோடி செலவில் தயாராக உள்ளது. முக்கியமாக, படத்தில் 20 நிமிடம் இடம் பெறும், சண்டைக் காட்சிக்காக ரூ.35 கோடி செலவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த காட்சியை ஏராளமான கார்களை வைத்து சேசிங் காட்சிகளாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.35 கோடி செலவு செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.