இயக்குனர் சீயோன் இயக்கத்தில் பொதுநலன் கருதி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. சில மாதங்கள் முன் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் இசக்கிமுத்து என்ற நபர் குடும்பத்தோடு கந்து வட்டி கொடுமைக்காக தீக்குளித்தது ஞாபகம் இருக்கலாம்.

அத்தகைய கந்து வட்டி பிரச்சினையை மையமாக வைத்து இயக்கி உள்ளார் இயக்குனர் சீயோன்.கந்து வட்டியால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மிக விரிவாக அலசி உள்ளதாம் இத்திரைப்படம். பொதுநலன் கருதி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அதையே தலைப்பாக வைத்துள்ளது சிறப்பு.