திருப்பூர் பகுதியில் பிரபல தொழில் அதிபர் சிவமூர்த்தி என்பரை கடத்தி கொலை செய்து ஓசூர் ஏரியில் விசிவிட்டு வேலூர் நோக்கி காரில் தப்பு வந்தப்போது ஜமீன் அருகே போலீஸார் நடத்திய சோதனையில் 3பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் கொலைக்கு பயன்படுத்திய செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் பகுதியில் பிரபல பனியன் கம்பெனி நடத்திவரும் தொழில் அதிபர் சிவமூர்த்தி இவருக்கும் இவரது கார்மேட் கம்பனியில்பணிபுரியும் மூர்த்தி மனைவி பூவனேஸ்வரிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.இது தொடர்பாக இருவரையும் மூர்த்தி பலமுறை தப்பான தகவல்கள் உங்களைப்பற்றி வருகிறது என்று எச்சரிக்கை செய்துள்ளார். இதனை இருவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை இதனைத்தொடர்ந்து மூர்த்தி கூலி படையே வைத்து சிவமூர்த்தியை கொலைசெய்ய முடிவு செய்து அதற்காக 1.கோயம்பத்தூர் பகுதியே சேர்த்த சகாதேவன் மகன் மணிபாரதி வயது 22, 2.செல்வராஜ் மகன் கொளதமன் வயது 22 கண்மணி மகன் விமல் வயது 35 ஆகிய 3 பேரிடம் பேசி சிவமூர்த்தியை கடத்தி செய்ய பணம் பேசிமுடித்து கடத்தி ஓசூர் கொண்டு சென்று கொலை செய்து ஓசூர் ஏரியில் வீசி விட்டு காரில் வேலூர் நோக்கி வந்தவர்கள் காரை நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் நடத்திய சோதனையில் முன்னுக்கு பின்னாக பேசியதில் 3 கைது செய்யப்பட்டனர். இது குறித்து வேலூர்,திருப்பூர் போலீசாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கொலை செய்யப்பட்ட சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு நெருங்கிய உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.