பிரபல இயக்குனர் சுசிகணேசன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வரும் திரைப்படம் ‘திருட்டுப்பயலே 2’. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சுசிகணேசன், அந்த படம் பெற்ற வெற்றி காரணமாக சுறுசுறுப்புடன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால், விவேக் உள்பட பலர் நடித்து வரும் இந்த இரண்டாம் பாகமும் முதல் பாகம் போலவே விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸ் நிறைந்ததாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.