சமீபத்தில் ஒரு குப்பைக்கதை திரைப்படம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தியேட்டரில் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டது.இதே போல் கரூரில் உள்ள ஒரு தியேட்டரிலும் சில படங்கள் தொடர்ந்து திருட்டுத்தனமாக பதிவு செய்யப்படுவதாக தெரிந்து அந்த தியேட்டரின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதே போல் மனுசனா நீ படமும் கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் திருடப்பட்டதால் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிலை தொடரக்கூடாது இதை கட்டுப்படுத்த வேண்டும் என இரு படங்களின் தயாரிப்பாளர்கள் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து மனு கொடுத்தனர்