திருவரூர் தொகுதில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், முக்கிய ஆளுங்கட்சியான அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால், 2 பேர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் அதிமுக அமைச்சருக்கு காமராஜுக்கு நெருக்கமான கலிய பெருமாளின் மனைவி மலர்விழி. நேற்று முதல் இவரது பேரே அடிபட்டு வருகிறது. அதேநேரத்தில், திமுக வேட்பாளர் கலைவாணனும், அமமுக வேட்பாளர் காமராஜும் பலம் மிக்கவர்கள் மற்றும் திருவாரூர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

எனவே, அவர்களை எதிர்த்து ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துவதை விட வேறொரு ஆண் வேட்பாளரை நியமிக்கலாம் என அதிமுக தலைமை யோசிக்கிறதாம். எனவே, ஏற்கனவே திருவரூர் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர் செல்வத்தையே அறிவிக்கலாம் என்கிற திட்டமும் இருக்கிறதாம்.

அதிமுக வேட்பாளர் யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.