ஸ்லீப்பர் செல்’ஐ அடுத்து பயோ பயங்கரவாதத்தை கையில் எடுத்த முருகதாஸ்

06:14 மணி

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். ரமணாsவில் அரசு ஊழியர்களின் ஊழல், 7ஆம் அறிவு படத்தில் போதி தர்மர், துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல், கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்சனை என தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் ‘ஸ்பைடர்’ படத்தில் பயோ பயங்கரவாதம் குறித்து அலசியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பயோ முறையை தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக கையில் எடுத்துள்ள நிலையில் இதனால் ஒரு நாட்டிற்கு ஏற்படும் ஆபத்தையும், அதை தடுக்கும் முறையையும் முருகதாஸ் ‘ஸ்பைடர்’ படத்தில் கூறியுள்ளாராம். மேலும் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வரும் மகேஷ்பாபுவுக்கு ஒரு இயந்திர ஸ்பைடர்தான் உதவுகிறதாம்.

இப்படி ஒரு தகவல் இந்த படம் குறித்து கசிந்து வருவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படம் அவருக்கு தமிழக ரசிகர்களையும் பெற்று கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393