இந்த வாரம் போட்டியில் களம் இறங்கும் படங்கள்!

திரைப்படதுறையின் 50 நாள் வேலைநிறுத்தத்தை அடுத்து தற்போது தான் புதிய படங்கள் வெளிவர தொடங்கி இருக்கிறது. ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பின் முதலில் பிரபுதேவா நடிப்பில் வசனம் இல்லாமல் வெளிவந்தது மெர்க்குரி படம். அதன்பின் கடந்த வாரம் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வணிக ரீதியாக லாபம் சம்பாதித்து வருகிறது.

அதுபோல இந்தவாரம் நான்கு படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. ஸ்டிரைக் காரணமாக குறைந்த படங்களாக வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் மே 11 வெள்ளியன்று நான்கு படங்கள் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவர உள்ளது. இந்த வாரம வெளிவர உள்ள படங்கள் எது என்றால், விஷால், சமந்த நடிப்பில் இரும்புத்திரை, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் கீர்த்திர சுரேஷ் நடிப்பிலும், அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், அரவிந்தசாமி, அமலாபால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகியவை திரையில் போட்டி போட இருக்கிறது.

இதில் விஷால் நடித்த இரும்புத்திரையும், அருள்நிதி, மகிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் த்ரில்லர் மூவி படங்கள் என்பதால் இரண்டிற்குமிடையில் தான் போட்டி அதிகமாக இருக்கும். மற்ற இரு படங்களான நடிகையர் திலகம், பாஸ்கர் ஒரு ராஸ்கர் எப்போதும் போல சாதாரண சென்டிமெண்ட் கதை என்பதால் அந்தளவுக்கு போட்டி இருக்க வாய்ப்பு கம்மிதான்.