தனுஷ் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் தொடரி. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷும் அதிகம் எதிர்பார்த்தார். காரணம் வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்குபின் தொடர்ந்து தோல்விகளை தொடுத்துவரும் தனக்கு இப்படம் வெற்றியை தரும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது எதிர்பர்ப்பு பூர்த்தியாகவில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் விமர்சனம் அப்படி உள்ளது.
ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லையாம். இனி கொடியாவது தனுஷை வெற்றிபட நாயகன் வரிசையில் இடம்பிடிக்க செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.