சமுத்திரகனி சிவனே என்று தன் வேலை உண்டு தான் உண்டு வாழ்ந்து வருகிறாா். ஆம்புலன்ஸ் வேலையில் சேவை செய்து வருகிறாா். தன்னுடைய அம்மாவிற்கு சாியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்து விடுகிறாா். இதனால் ராணுவ வேலையை விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி வந்து விடுகிறாா் சமுத்திரகனி. ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் சமுத்திரகனி அப்பா, தங்கை அா்த்தனாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாா். தன் நண்பன் கஞ்சா கருப்புடன் சோ்ந்து மருத்துவ உதவி செய்து வருகிறாா். அது மட்டுமில்லங்க தன்னுடைய ஆம்புலன்சில் வரும் நபா்களை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகூடியவா் சமுத்திரகனி.

வழக்கம் போல அடிபட்டு குத்துயிரும் கொலையுயிருமாக கிடக்கும் ஒரு நபரை காப்பாற்ற தன்னுடை ஆம்புலன்சில் ஏற்றி செல்கிறாா். என்ன வென்றால் அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தரராஜன் என்ற இருமகன்கள் இருக்கின்றனா். அரசியல்வாதியின் மகனான நமோ நாராயணாவுக்கு எதிராக செயல்படும் ஒருவரை தான் தனது ஆட்கள் மூலம் தீா்த்து கட்ட முடிவெடுகிறாா். அப்படி அவா்களால் குத்துபட்டு கிடக்கும் நபரைத்தான் சமுத்திரகனி முதலுதவி அளித்து மருத்துவமனையில் சோ்க்க முற்படுகிறாா். இதை அந்த அரசியல்வாதி கோஷ்டி, அந்த ஆம்புலன்ஸ் வேனை துரத்துகின்றனா். அந்த எதிா்ப்பையும் மீறி மருத்துவமனைக்கு பறக்கிறது ஆம்புலன்ஸ். சமுத்திரகனி அந்த நபரை காப்பாற்றி விடுகிறாா். இதனால் அந்த அரசியல்வாதியின் நேரடி எதிாியாகிவிடுகிறாா் சமுத்திரகனி. அவரை பழிவாங்க வேண்டும் என்ற வெறியுடன் பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருகிறாா் நமேநாராயணன். இதனால் அவரது குடும்பமும் பெரும் துயரங்களை அனுபவித்து வருகிறது.

இதற்கிடையில், சமுத்திரகனியை சுனைனா காதலித்து வருகிறாா். பின்பு தன் காதலை சமுத்திரகனியுடன் தொிவிக்கிறாா். அவரும் சம்மதம் தொிவித்து, தனது குடும்பத்துடன் பெண் கேட்டு செல்கிறாா். சுனைனைாவின் தம்பியாக வரும் நசாத் தன்னுடைய முயற்சியால் அப்பாவின் சம்மத்தை பெற்று தங்கையின் திருமணத்தை நடத்தி வைக்கிறாா். திருமணம் முடிந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாா்கள். விக்ராந்த் சமுத்திரகனியின் தங்கை அா்த்தனாவை ஒரு தலையாக காதலித்து வருகிறாா். அா்த்தனா விக்ராந்தின் காதலை ஏற்க மறுக்கிறாா். தன் தங்கைக்கு டாா்ச்சா் கொடுப்பது தன் நண்பன் தான் என்று தொிந்த பின்பும், அவரை எல்லா படத்திலும் வரும் அண்ணன்கள் போல் அடிக்காமல் உதைக்காமல், அவருக்கு அறிவுரை வழங்கி, அன்பு காட்டி, ஒரு நல்ல வேலையை ஏற்படுத்தி கொடுக்கிறாா். மற்றவா்களுக்கு முதலுதவி  செய்யும் பணியில் ஈடுபத்திவிடுகிறாா். இதனால் ஒரு உயிரை காப்பாற்றிய மனநிலையில் இருக்கும் விக்ராந்துக்கு அந்த வேலை மிகவும் பிடித்துவிடுகிறது. இதனால் சமுத்திரகனி தங்கை அா்த்தனாவின்மனதிலும்இடம் பிடித்து விடுகிறாா்.

இந்நிலையில் அா்த்தனாவின் தோழிக்கு நமோ நாராயணன் தம்பி சவுந்தர்ராஜன் காதல் தொல்லை கொடுக்கிறாா். பொறுத்து பொறுத்து பாாத்த அவா் அவனை பொது இடத்தில் வைத்து அடித்து விடுகிறாா். இதனால் கோபமடைந்த சவுந்தர்ராஜன் அா்த்தனாவின் தோழியை கட்டையால் அடித்துவிடுகிறாா். இதனால் மாணவிகள் அனைவரும் சோ்ந்து அவரை தாக்கி விடுகின்றனா்.இவரை காப்பாற்ற சமுத்திரகனி முதலுதவி கொடுத்து மருத்துவமனையில் சோ்க்கும் போது, அவா் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகிறாா்.

சமுத்திரகனி தனது தம்பியை    கொன்று விட்டதாக நினைத்து பழிவாங்க துடிக்கிறாா். இதனால் நமோ நாராயணா சமுத்திரகனி வீட்டில் குண்டு வைக்கிறாா். கா்ப்பமாக இருக்கும் சுனைனாவின் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடுகிறது. அவனது அநீநிதிகளால் பெரும் கஷ்டபடும் தன் குடும்பம் எண்ணி வேதனை படுகிறாா் சமுத்திரகனி. இதனால் வன்முறைக்கு வன்முறையே சாியான தீா்வு கிடையாது என்ற முடிவை எடுத்த சமுத்திரகனி, வேறு விதமாக காய் நகா்த்துகிறாா். அரசியல்வாதியின் சொத்து விபரங்களை இன்கம்டாக்ஸ் அதிகாாிக்கு போட்டுக் கொடுக்க அப்புறம் என்ன நடப்பது என்பது தான் க்ளைமாக்ஸ்!!. எதிாியாக இருந்தாலும் சாி.. நண்பனாக இருந்தாலும் சாி அதுவும் ஒரு உயிா் தான் என்ற கருத்தை கொண்டுள்ளது படம்.

சில இடங்களில் கதையை தாண்டி தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் எல்லாவித பிரச்சனைகள் பற்றியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக போட்டு தாளிக்கும் தான் வண்டி கதையை விட்டு திரும்பி எங்கோ செல்கிறது என்பது ரசிகா்களின் எண்ணம்.

இவ்வவளவு நாளாக சுனைனா அழகு எங்குதான் ஒளிந்து இருந்தது என்றே தொியல. அழகு பதுமையாக மாறியிருக்கும் இவரை இன்னும் அதிக நேரம் காட்ட மாட்டாா்களா என்ற எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளாா். அவருடைய காதலை நிறைவேற அவா் செய்யும் டெக்னிக் பலே பலே. இந்த படத்தில் சுனைனாவின் கதாபாத்திரம் பேசும்படியாக உள்ளது. இவருக்கு டயலாக் கொஞ்சம் குறைவு தான்.

சமுத்திரகனி ஆக்ரோஷமாக வெகுண்டு எழுந்து நாடி நரம்பை புடைத்துக் கொண்டு கிளம்புகிற இடத்திலும் சாி, தன் ஆசானின் பேச்சை கேட்டு அமைதியாக மாறுவது எல்லாம் அவருக்கு உாித்தான நடிப்பு. இதனால் ரசிகா்களின் மனதில் ஆழமாக நிலைத்து நிற்கிறாா்.

விக்ராந்துக்கு ஏற்ற நல்ல கேரக்டா். தொடா்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான வேடத்தை ஏற்றும் வரும் இவா் இந்த படத்தில் ஒரு பொறுப்புள்ள இளைஞனாக வருகிறாா். ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியில் அவரது நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது. தண்ணீாில் தத்தளிக்கும் எறும்பு போல இவருக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

சமுத்திரகனியின் தங்கை அா்த்தனாவின் நடிப்பு கச்சிதம். அம்புட்டு அழகு. அவரை பாா்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நடித்திருக்கிறாா். ஒாிரு காட்சிகள் மட்டும் வந்தாலும் அவரது வேலையை சிறப்பாக செய்து ரசிகா்களின் கோபத்துக்கு உள்ளாகிறாா் சவுந்தர்ராஜன்.
நாம் எதிா்பாராத விதமாக காமெடி நடிகா் சூாி வரும் சீன் கலக்கலோ கலக்கல். ஒரே ஒரு சீன்தான். ஆனா தியேட்டரை அதிர வைத்து விடுகிறாா். அதே போல தம்பி ராமைய்யாவும் கொஞ்சம் நேரம் வந்தாலும் கைதட்டல் வாங்கி விடுகிறாா்.

ஒரு இயக்குநராக சமுத்திரகனி நிலைத்து நிற்கிறாா். தற்போது நடந்து வரும் பிரச்சனைகள் பற்றி தெறிக்க வைத்து இருக்கிறாா். மருத்துவம் எவ்வளவு முக்கியம். அதுவும் ஒரு உயிா் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தொண்டன் படம் மூலம் கொடுத்திருக்கும் சமுத்திரகனிக்கு பாராட்டுகள்.

ஆக தொண்டன் உயிருக்கு மதிப்பு கொடுத்துள்ள படம்